Tamil
ta
HomeContact UsFAQBlog

எவ்வாறு 'இமேஜ் சர்ச்' ஆப்ஷனை பயன்படுத்துவது?

இமேஜ் சர்ச் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்குத் தேவையானப் பொருட்களை மீஷோ ஆப்பிலிருந்து எளிதாக கண்டறியலாம். உங்கள் கஸ்டமருக்கு சிறப்பாக பணி செய்ய இந்த ஃபீட்சர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பயன்கள்:

  • ஒரே மாதிரியானப் பொருட்களைத் தேட : இந்த ஃபீட்சர் மூலம் ஒரே மாதிரியானைப் பொருட்களை மீஷோ ஆப்பிலிருந்துத் தேடலாம். ரீசெல்லர்களுக்கு இது மிகவும் பயனுள்ள கருவியாக உள்ளது. ஒருவேளை உங்கள் கஸ்டமர் ஒரு பொருளை கேட்கும்போதும் அல்லது ஒரு படத்தை உங்களுக்கு பகிர்ந்து அதேபோன்ற பொருளை உங்களிடம் கேட்கும்போதும் இந்த ஃபீட்சர் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். 
  • ஒரு குறிப்பிட்ட பொருளைத் தேட: இமேஜ் சர்ச் ஆப்ஷன் மூலம் மீஷோ ஆப்ப்லிருக்கும் ஒரு குறிப்பிட்டப் பொருளை நாம் தேடலாம். கஸ்டமர் ஒரு குறிப்பிட்டப் பொருளை கேட்கும்போதும் அல்லது உங்களுக்கு உடனே ஒரு பொருளை ஆர்டர் செய்ய வேண்டும் எனும் பட்சத்திலும் நீங்கள் இந்த ஆப்ஷனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

'இமேஜ் சர்ச்' ஃபீட்சரை பயன்படுத்தும் முறை:

  1. இந்த ஃபீட்சரைப் பயன்படுத்த மேலேயிருக்கும் சர்ச் பார் ஆப்ஷனை டேப் செய்யுங்கள்.
  2. மேலே வலதுபுறத்தில் இருக்கும் கேமரா ஐகானை கிளிக் செய்யுங்கள் அல்லது இமேஜ் சர்ச் பாரை பயன்படுத்துங்கள்.
  3. உங்கள் ஃபோன் கேலரியில் இருக்கும் இமேஜை செலக்ட் செய்யுங்கள் அல்லது கேமரை ஐகானை டேப்(TAP) செய்து படம் பிடியுங்கள். 
  4. நீங்கள் தேர்ந்தெடுத்த அல்லது படம்பிடித்த படம் அப்லோட் ஆகும்வரை காத்திருங்கள். இப்போது மீஷோ ஆப்பில் அதே மாதிரியான தயாரிப்பு கேட்லாகுகளைக் காண முடியும்.

ரீசெல்லர்கள் மிகவும் சிறப்பாக ரீசெல்லிங் செய்வதற்காகவே இமேஜ் சர்ச் ஆப்ஷன் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த ஆப்ஷனை முறையாகப் பயன்படுத்தி உங்கள் விலைமதிப்பில்லா நேரத்தை மிச்சப்படுத்துங்கள்.

ஹாப்பி ரீசெல்லிங்!