Tamil
ta
HomeContact UsFAQBlog

கேட்லாக் குறித்து அறியலாம்.

மீஷோ ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான அதிக தரமுடைய கேட்லாகுகளை அறிமுகம் செய்கிறது.  இவற்றில் சரியான கேட்லாகுகளைத் தேர்ந்தெடுத்து ஷேர் செய்தல் அவசியமான ஒன்றாகும்.

எங்கே கேட்லாகுகள் இருக்கும்?

மீஷோ ஆப்பில் ஃபார் யூ மற்றும் கலெக்ஷன்ஸ் செக்ஷனில் கேட்லாகுகளை காண முடியும். 

"ஃபார் யூ":

  • 3.5 அல்லது அதற்கு மேற்பட்ட ரேட்டிங் பெற்ற கேட்லாகின் சிறப்பு என்னவெனில், குறைந்தது 4 ரீசெல்லராவது அந்த தயாரிப்பை விமர்சித்து ரேட்டிங் கொடுத்திருக்க வேண்டும். அதாவது அந்த தயாரிப்பை கஸ்டமர்கள் பயன்படுத்தி பாராட்டி இருக்கிறார்கள் என அர்த்தம்.
  • மீஷோவில் ஃபார் யூ செக்ஷனில் தினமும் காலை 8.30 மணியிலிருந்து இரவு 10 மணி வரைக்கும் ஒவ்வொரு 10 நிமிஷத்திற்கும் ஒரு புது கேட்லாகை அப்லோட் செய்யப்படுகிறது.
  • சில சமயம் ஒரே கேட்லாக் திரும்ப திரும்ப வருவதை நீங்கள் பார்க்கலாம்.  அந்த கேட்லாக்ஸ் அதிக அளவில் விற்று ஆல் டைம் பெஸ்ட் கேட்லாக்ஸ் திகழுவதே அதற்கு காரணம். நீங்களும் அந்த கேட்லாக்ஸை ஷேர் செய்து அதிக ஆர்டர்களைப் பெற முயற்சி செய்யுங்கள்.

கலெக்ஷன்ஸ்:

கலெக்ஷன்ஸ் செக்ஷனில் கேட்டகிரி லேண்டிங் பேஜஸை உங்களால் காண முடியும். ஒரே மாதிரியான வகை, பேட்டர்ன், ஸ்டைலில் இருக்கும் 70-80 தயாரிப்புகள் ஒரே இடத்தில் சேர்ந்து  கேட்டகிரியில் காணலாம்.

பிரெளஸ் செய்தல் மற்றும் தேர்ந்தெடுத்தல்:

மார்க்கெட் டிரெண்டை அறிந்து அதற்கேற்றவாறு கேட்லாகுகளை மீஷோ ஆப்பில் பிரெளஸ் செய்யுங்கள். அதில் உங்களுக்கு விருப்பமான கேட்லாகுகளை தேர்ந்தெடுத்து விற்பனை செய்யுங்கள். 

கேட்லாகுகளை ஷேர் செய்தல்:

வாட்சப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற ஆன்லைன் மார்க்கெட்டிங் பிளாட்ஃபார்ம்களில் நீங்கள் பிராடக்ட் கேட்லாகுகளை ஷேர் செய்யலாம். ஒவ்வொரு கேட்லாகின் கீழேயும் 'ஷேர் நவ்' பட்டன் இருக்கும். அதைப் பயன்படுத்தி கேட்லாகுகளை ஷேர் செய்யலாம். 

ஆர்டர் செய்தல்:

  1. ஒரு பொருளை ஆர்டர் செய்ய அப்பொருளின் கேட்லாக் ஐடி அல்லது இமேஜை கொண்டு சர்ச் செய்யுங்கள்.
  2. கேட்லாகை டேப் செய்து பொருளைத் தேர்ந்தெடுங்கள். 'ஆட் டூ கார்ட்' பட்டனை டேப் செய்யுங்கள்.
  3.  அளவு மற்றும் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுங்கள். 'கன்டினியூ'-வை டேப் செய்யுங்கள்.
  4. மேலே இருக்கும் 'கார்ட்' ஐகானை டேப் செய்யுங்கள். உங்களுக்கு விருப்பமான பேமண்ட் முறையத் தேர்ந்தெடுத்தப் பின் 'புரொசீட்'- ஐ டேப் செய்யுங்கள். 
  5. மார்ஜினை சேருங்கள். 'புரொசீட்'- ஐ டேப் செய்து, உங்கள் கஸ்டமரின் முகவரியை பூர்த்தி செய்யுங்கள்.
  6. 'பிளேஸ் ஆர்டர்'-ஐ டேப் செய்யுங்கள்.

மீஷோ ஆப்பிலிருந்து சரியான கேட்லாகுகளை தேந்தெடுத்து விற்பனை செய்து வெற்றிக்கரமான தொழிலதிபராக மாறுங்கள். ஹாப்பி ரீசெல்லிங் !