Tamil
ta
HomeContact UsFAQBlog

எதை ஆய்வு செய்ய வேண்டும்?

உங்கள் ரீசெல்லிங் பிஸ்னஸை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல விரும்பினால் அதற்கு சரியானத் தீர்வு 'ஆய்வாகும்'. நம்முடைய சிறந்த ரீசெல்லர்கள் இந்த ஆய்வு யுக்திகளை தினமும் செயல்படுத்தி அவர்களின் விருப்பத்திற்கும் அதிகமாக சாதித்துள்ளனர். அவர்கள் எம்மாதிரியான ஆய்வு யுக்திகளை செயல்படுத்தி தங்களது ரீசெல்லிங் பிஸ்னஸை வளர்ச்சிப் பாதையில் கொண்டுச் செல்கின்றனர் என்பதுக் குறித்துக் காண்போம். 

எதற்காக ஆய்வில் உங்களது நேரத்தை அதிகம் செலவழிக்க வேண்டும்?

லேட்டஸ்ட் மார்க்கெட் டிரெண்டுகளை கண்டறிய சரியான ஆய்வு உங்களுக்கு உதவும்.  இதன் மூலம் உங்கள் கஸ்டமர்களுக்கு எம்மாதிரியானப் பிராடக்ட்டுகளை ஷேர் செய்யலாம் என்பதுக் குறித்த அறிவை உங்களால் பெற முடியும். இதனால் ரீசெல்லிங்கின்போது தவறானப் பொருட்களை தேர்ந்தெடுக்கும் அபாயம் வெகுவாக குறையும். உங்களால் உங்கள் போட்டியாளர்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிய முடியும். எல்லாவற்றிலும் முக்கியமாக மார்க்கெட் டிரெண்ட் குறித்து ஆய்வு செய்வதும்  மீஷோ ஆப்பின் ஃபீட்சர்கள் குறித்து முழுமையாக அறிவதும் உங்களின் ஆன்லைன் ஷாப்பை விரிவுபடுத்த உதவும்.

எதுக் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்?

  • நீங்கள் மீஷோ ஆப்பில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட, அதிகம் ஷேர் செய்யப்பட்ட, மற்றும் அதிகம் ரேட்டிங் தரப்பட்ட பிராடக்ட்டுகளை அறிய வேண்டும். எதற்காக அந்தப் பிராடக்ட்டுகள் மற்றப் பிராடக்ட்டுகளைக் காட்டிலும் அதிக கவனத்தைப் பெற்றது என்பதைக் குறித்தும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
  • மீஷோ ஆப்பில் 'ஃபார் யூ' மற்றும் கலெக்ஷன்ஸ் டேபுக்களுக்குச் சென்று அவற்றில் எம்மாதிரியானப் பிராடக்ட்டுகள் இடம்பெற்றுள்ளது என்பதுக் குறித்துக் காண வேண்டும்.
  • நீங்கள் ரீசெல்லிங் செய்ய விரும்பும் பிராடக்ட்டுகள் குறித்து அதிகம் தெரிந்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு தரம், சைஸ் போன்றவைகளை.
  • நம்முடைய டாப் ரீசெல்லர்கள் எந்த முறையில் ரீசெல்லிங் செய்கிறார்கள் என்பதை கண்டறியுங்கள்.
  • மீஷோ ஆப்பில் உங்களின் ரீசெல்லிங்கிற்கு உதவுவதற்காக பல ரீசெல்லிங் ஃபீட்சர்கள் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. அவைகள் குறித்து முழுமையாக அறிந்துக் கொள்ளுங்கள். 
  • ரீசெல்லர் மற்றும் கஸ்டமர்களுக்காக ஏற்ப்படுத்தப்பட்ட பாலிசிகளான கேன்சலேஷன், VIP புரோக்ராம் போன்றவற்றை ஆய்வு செய்யுங்கள்.
  • நமது மீஷோ ரீசெல்லர்கள் ரீசெல்லிங்குக்காகப் பயன்படுத்தும் ஃபேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம் போன்ற அனைத்து சோஷியல் மீடியா பிளாட்ஃபார்ம்கள் குறித்தும்  தகவல்களை சேகரியுங்கள்.
  • ஃபேஸ்புக் குரூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் உங்களைப் போன்ற மற்ற ரீசெல்லர்கள் போஸ்ட் செய்த போஸ்ட்டுகளுக்கு அவர்களின் கஸ்டமர்கள் கொடுத்த கமெண்டுகளை படியுங்கள். 
  • ரீசெல்லிங் செய்வதற்கு முன்பு உங்கள் பிராடக்ட்டின் பிராடக்ட் டிஸ்கிரிப்ஷனுக்கு  சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள். உதாரணத்திற்கு இன்ஸ்டாகிராமில் நீங்கள் பதிவிடும் ஹேஷ்டேகுகள்.

உங்கள் ரீசெல்லிங் பயணத்தை சிறப்பாக தொடங்க மீஷோ ஆப்பின் ஹெல்ப் செக்ஷனில் பயனுள்ள பல வீடியோக்களைப் பதிவிட்டுள்ளோம். அவற்றில் எங்களின் தலைசிறந்த ரீசெல்லர்கள் சிறந்த ரீசெல்லிங் டிப்ஸ்களைத் தந்துள்ளார்கள். அவற்றை முழுமையாக கண்டு அவைகளை செயல்படுத்தி மீஷோ மூலம் அதிகம் சம்பாதியுங்கள்!

ஹேப்பி ரீசெல்லிங்!